தமிழ்நாடு மற்றும் ஆந்திர போலீசார் ஆலோசனை கூட்டம்.

586பார்த்தது
வேலூர் மாவட்டம்

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம். தமிழ்நாடு - ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லையில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்புகள் குறித்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர போலீசார் ஆலோசனை கூட்டம்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லையாக உள்ள வேலூர்- சித்தூர் மாவட்டங்களில் பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில் தடுப்பது எப்படி? என ஆலோசனை கூட்டம் சித்தூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில், டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன், சரவணன், இருதயராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர், ஆந்திர மாநில போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர், இரு மாநில எல்லைகளில் மேற்கொள்ளப்படும் சோதனை பணிகள், பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில் கடத்தலை தடுப்பது எப்படி? , கஞ்சா, குட்கா கடத்தலை தடுப்பது எப்படி? , குற்றச்செயல்களை தடுப்பது குறித்தும், சட்டப்பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி