ரிவேரா 24 சர்வதேச கலை திருவிழா நிறைவு

570பார்த்தது
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா என்னும் சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் 135 பல்கலைக்கழகங்கள் கல்லூரி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 25 நாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சி பின்னனி பாடகர்கள் சங்கர் மகாதேவன், விஜய் பிரகாஷ் குழுவின் இசை நிகழ்ச்சியும் அண்டை மாநிலங்களான அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஆக்கியா என்ற மாபெரும் பண்பாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டில் ஒட்டுமொத்த சேம்பியன் வேலூர் விஐடிக்கும் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான ஒட்டுமொத்த சாம்பியன் சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்டது. இதற்கான கோப்பையை திரைப்பட நடிகை சமந்தா வழங்கினார். விஐடி துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜிவி செல்வம் துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மலிக் பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி