வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தனி நபரால் பரபரப்பு

62பார்த்தது
வேலூர் மாவட்டம்.

*எங்க தாத்தா ஜமீன்தார், எங்களுக்கு சொந்தமான 25 ஏக்கரை பொது மக்களுக்கு இலவசமாக கொடுக்க உள்ளேன் அதற்க்கு பட்டா கொடுங்க என குளத்துக்கு பட்டா கேட்டு பொது மக்களுடன் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தனி நபரால் பரபரப்பு*


வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது தாத்தா சின்னய்யா நாயக்கர் என்பவர் பெயரில் உள்ள பட்டா மற்றும் சிட்டா வழங்க கோரி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை ஐந்து முறை அணுகியதாகவும் இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த ஒரு பதில் அளிக்காத காரணத்தால் இன்று ஊர் பொதுமக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோருடன் வந்து தனது தாத்தா பெயரில் உள்ள சுமார் 25 ஏக்கர் நிலத்தின் பட்டாவை வழங்க கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

வட்டாட்சியர் விளக்கம்:

இது குறித்து காட்பாடி வட்டாட்சியர் சரவணனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது, இவர்கள் பட்டா கேட்கும் இடம் குளம் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலம் என அரசு ஆவணத்தில் உள்ளது. மேலும் அந்தக் குளத்தையே தங்களுக்கு பட்டாவாக மாற்றி வழங்கும்படி மனு அளிக்க வந்ததாகவும் நீர்நிலை புறம்போக்கு பகுதியை பட்டா செய்து தர இயலாது என கூறினர்.

தொடர்புடைய செய்தி