ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளர்கள் ஆர்பாட்டம்

63பார்த்தது
வேலூர் மாவட்டம்

வேலூரில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளர்கள் ஆர்பாட்டம்

வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளர்கள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது இதனை துணை தலைவர் கோபால ராஜேந்திரன் துவங்கி வைத்தார் நிர்வாகிகள் சீனிவாசன் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் சார்பில் உதவி தொகை புதியதாக கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் உடனடியாக அரசு மாற்றுத்திறனாளர்கள் வாழ்வாதார உதவி தொகையை உடனே வழங்க வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளர்கள் நூறு நாள் வேலையும் வழங்கபடவில்லை நியாயவிலை கடைகளில் 35 கிலோ இலவச ரேஷன் அரிசியும் கிடைக்கவில்லை எனவே இக்கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பறை அடித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி