பழனியில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24, 25) முருகன் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காண வருவோருக்கு அனுமதி இலவசம். பழநியில் நாளை தொடங்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்படும். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.