பால் மற்றும் பால் சாரந்த பொருட்களை விற்பனை செய்யும் சில உணவு நிறுவனங்கள், ‘ஏ1 மற்றும் ஏ2’ என்று வகைப்படுத்தி பால், நெய், தயிர் போன்ற பொருட்களை விற்பனை செய்துவருகின்றன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிப்படி, இதுபோன்று எந்த இடத்திலும் ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தவில்லை என்பதால், இது விதிமீறலாக பார்க்கப்படுகிறது. எனவே லேபிள்களை அந்தந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக நீக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.