காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசிடம், கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கூறியுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. ஏற்கனவே சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசின் மதிப்பீட்டுக் குழுவிடம் மே 30ம் தேதி அனுமதி கோரியிருந்தது. விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு விண்ணப்பத்தில் தகவல் தெரிவித்துள்ளது.