வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பால் கூட ஊர்வலம். அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு மாச்சனூர் நத்தை மேடு காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், இரவு 7 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி9 உலா நடந்தது. நேற்று9. 30 மணிக்கு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பகல் 3 மணிக்கு கரக ஊர்வலம் நடந்தது இதனைஅடுத்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து தீயில் இறங்கினர். 5 மணிக்கு அம்மன் கோவிலில் மயான கொள்ளை. சூரைவிட்டனர். மயான கொள்ளை திருவிழா திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்தனர்.