கே வி குப்பத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது

1097பார்த்தது
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் வேலூர் மாவட்டம் வருவாய் துறை , பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கே வி குப்பத்தில் 264 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட எம்பி கதிர் ஆனந்த் 264 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி பேசினார். இதில் சமூக நலம் திட்ட தாசில்தார் சுமதி மண்டல துணை தாசில்தார் பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஊரக, நகர்புற வாழ்வாதார சார்பில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை பிரிவு எம்பி கதிர் ஆனந்த் பார்வையிட்டார். இதில் பஞ்சாயத்து தலைவர் புஷ்பலதா, யூனியன் கவுன்சிலர்கள் சீதாராமன் , விஜயலட்சுமி , வேலு, ரவி , சரளா உள்பட ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :