ராமாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழா

58பார்த்தது
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த சோழமூர் ராமாபுரம் கிராமத்தில் கெங்கையம்மன்  சிரசு  திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு  அம்மன் கரகம் வீதி உலா நடந்தது பின்னர் பிள்ளையார் கோயிலில் அம்மன் சிரசுக்கு  பூஜை வழிபாடு  செய்யப்பட்டு அம்மன் சிரசு கிராமத்தில்  முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது அம்மன் சிறுசுக்கு பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்

இதனைத் தொடர்ந்து கோயிலில் அம்மன்  சிரசு  ஏற்றபட்டு கண்  திறப்பு  நிகழ்வு நடைபெற்றது இதில் ஊர்மக்கள் கெங்கை அம்மனுக்கு சீர்வரிசைகள் வைத்து பக்தர்கள் பொங்கல் வைத்தல் கூழ்வார்த்து அம்மனுக்கு படையல்லிட்டனர்

பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற விரதம் இருந்து , கொக்கியல் கட்டை ஆட்டம், கோலட்டம், சிலம்பாட்டம், ஆகியவை நடத்தினர்

மேலும் கிராமத்து இளைஞர்கள் மேல தாலத்துடன் தண்டு மாலையை ஊர்வலமாக  எடுத்து வந்து  அம்மனுக்கு  சாத்தினர்.

இதில் உள்ளூர், மற்றும்  வெளியூரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  அம்மனை வணங்கி  சென்றனர் இதனைத் தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

விழா ஏற்பாடுகளை நாட்டாமை ஆறுமுகம், மேட்டுக்குடி வெங்கடேசன், தர்மகத்தா சரவணன், விழா குழு தலைவர் சுகுமார், திமுக மாவட்ட பிரதிநிதி அசோகன், ஊர் பிரபு அவர்கள் சிவானந்தம் மணி, மற்றும்ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி