சென்னங்குப்பம்  கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு விழா நடந்தது

58பார்த்தது
கே வி குப்பம் அடுத்த சென்னங்குப்பம்  கிராமத்தில் கெங்கையம்மன்  சிரசு  விழா  நடந்தது. விழா முன்னிட்டு  நேற்று  அம்மன் கோயிலில் அம்மன் சிரசுக்கு  பூஜை வழிபாடு  செய்யப்பட்டது. அம்மன் சிரசு கிராமத்தில்  வீதி  உலா வந்தது. காலை12மணிக்கு  கோயிலில் அம்மன்  சிரசு  ஏற்றபட்டு  கண்  திறப்பு  நிகழ்வு நடந்தது. ஊர்  மக்கள் அம்மனுக்கு சீர்வரிசை வைத்தனர். பக்தர்கள்  பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல் நடத்தினர். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற விரதம் இருந்து , கோலட்டம்,   சிலம்பாட்டம்,   ஆகவே நடத்தினர். கிராமத்து இளைஞர்கள் மேல தாலத்துடன்  தண்டு மாலையை ஊர்வலமாக  எடுத்து வந்து  அம்மனுக்கு  சாத்தினர். உள்ளூர், மற்றும்  வெளியூரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  அம்மனை  வணங்கி  சென்றனர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை  7 மணிக்கு  வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்தனர்                                               ( பட விளக்கம் )  கே வி குப்பம் அடுத்த  சென்னங்குப்பம்  கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு விழாவில்  அம்மன்  சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி