பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா

5410பார்த்தது
மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வேலூர் மாவட்டம் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழாவானது நடைபெற்றது. இறந்தவர்களின் சமாதிகளில் அவர்களுக்கு விருப்பமானவைகள் உணவு வகைகள் இறைச்சி, மது உள்ளிட்டவைகளை வைத்து படைத்தனர்.

பின்னர் வேலூர் மாவட்டம் காட்பாடி, கழிஞ்சூர், மோட்டூர், விருதம்பட்டு, வேலூர் அம்பேத்கர் நகர் கோட்டை சுற்றுசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பிரம்மாண்ட தேர்களில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வந்து அம்மன் ஆற்றில் இறங்கியது.

முன்னதாக தங்களின் நேர்த்திகடனை செலுத்திட, அரக்கண், அரக்கியர்கள், காளி, பார்வதி சிவன் உள்ளிட்ட வேடங்களை அணிந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை விழாவில் பங்கேற்றனர். இதில் எலுமிச்சை பழங்கள், சில்லரை காசுகளை அம்மன் மீது வீசி எறிந்தனர்.

இந்த விழாவில் ஆயிரகணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மயான கொள்ளை விழாவை முன்னிட்டு வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி