திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பட்டம் வழங்கினார்

59பார்த்தது
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது இந்தப் பட்டமளிப்புவிழாவில் 37, 886 இளங்கலை, 5, 268 முதுகலை 111 எம். ஃபில் மாணவ, மாணவிகள் என மொத்தம் 43, 735 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர். இதில், 249 முனைவர் பட்டம், 42 இளங்கலை, 34 முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளுடன் பட்டங்களை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி வழங்கினார். முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி, துணைவேந்தர் ஆறுமுகம், சிறப்பு விருந்தினர் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி. ராமதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி