காட்பாடி பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது

76பார்த்தது
காட்பாடி பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது
காட்பாடி தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்றவர்கள் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடி தனியார் கல்லூரி அருகே சோதனை மேற்கொண்டு சுமார் 5000 ரூபாய் மதிப்புடைய 0. 500 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்து சந்தோஷ் காந்தி நகரை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் வண்ணந்தாங்கல் பகுதியில் இருபதாயிரம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சேவியர் பால் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே சோதனை மேற்கொண்டு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து ராகுல் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி