தெலங்கானா மாநிலம் புவனகிரி நகரைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி தொங்கேணி பாண்டு (59) என்ற நபர் அம்மாநில அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தை நிறுத்தி அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகள் CPR உதவி செய்தபோது நினைவு திரும்பியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.