மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் மற்றும் பாஜக, சிவசேனா, என்சிபி தலைவர்களும் உடனிருந்தனர். இதனிடையே புதிய அரசு ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரியிருந்தார். பாஜக, சிவசேனா, என்சிபி கூட்டணி 232 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.