நெஞ்செரிச்சல் காரணமாக ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அமிலத்தன்மை (அசிடிட்டி) காரணமாக நேற்றிரவு (நவ., 25) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை சீராகி நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.