இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தனர். அதற்கடுத்த நாளே ரஹ்மானின் குழுவில் பணியாற்றிய பெண் பேசிஸ்ட் மோகினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்வதாக கூறினார். பின் இருவரையும் தொடர்புப்படுத்தி வதந்திகள் பரவிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மோகினி டே வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர். அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எங்களைப் பற்றிய வதந்திகள் ஆதாரமற்றவை. அவை காயப்படுத்துகின்றன என கூறியுள்ளார்.