பாதுகாப்பு வேண்டி காட்பாடி காவல் நிலையத்தில் புகார்

82பார்த்தது
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ராஜலிங்கம் நகர் 4வது தெரு கல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் துணை வணிகவரி அலுவலராகப் பணியாற்றி கடந்த 2000 ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு கோசலன் என்ற மகனும் சத்யாவதி என்ற மகளும் உள்ளனர். மனைவி பெயரில் இருந்த சொத்துக்களை உயிலாக மனைவி சாகும் முன் எழுதி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஓய்வு பெற்றவுடன் வந்த பணத்தில் கல்புதூர் பகுதியில் ஒரு வீடு கட்டியுள்ளார். அவருடைய மகன் கோசலன் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அதேபோன்று மகள் சத்யாவதி திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். அன்று முதல் உறவினருடைய துணையோடு வசித்து மகளுக்கு பிறந்த பேரபிள்ளைகளின் பெயரில் மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேரப்பிள்ளைகள் மீது எழுதிய சொத்துக்களை தங்கள் பெயர் மீது மாற்றி எழுத வேண்டுமென வெங்கடேசனை அவருடைய மகன் மகள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் கடந்த 29ஆம் தேதி வீட்டில் இருந்த என்னை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டிற்கு பூட்டை போட்டுவிட்டு தனது கார் மற்றும் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று விட்டதாகவும் தற்போது எனது மகன் மகளிடம இருந்து தனது வீட்டையும் என்னுடைய பொருட்களையும் மீட்டு தர வேண்டும் மேலும் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காட்பாடி காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி