காட்பாடியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆட்சியர் ஆய்வு

1887பார்த்தது
ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள பள்ளிகள் நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று காட்பாடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய மூன்று தொகுதிகளை சேர்ந்த 47 தனியார் பள்ளிகளில் இயக்கப்பட்டு வரும் 441 பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வில் பள்ளி பேருந்துகளில் முன் மற்றும் பின் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா, அவசர வழி தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, வாகனங்களில் இயக்கப்படும் பிரேக் கருவிகள், போதையே இருக்கை வசதிகள், பேருந்துகளில் உள்ள படிக்கட்டின் அளவுகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்

பேருந்து ஓட்டுநர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் தங்களின் குழந்தைகளைப் போல பாவித்து வாகனங்களை மெதுவாகவும் சாலை விதிகளை பின்பற்றியும் பேருந்துகளை இயக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்

ஒவ்வொரு பேருந்துகளிலும் கண்டிப்பாக முதலுதவி பெட்டிகள் வைத்திருக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவர்கள் பேருந்து விட்டு கீழே இறங்கிய பின்பு அவர்கள் பத்திரமாக சென்றார்களா என்பதை கவனித்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி