கே வி குப்பம் யூனியன் உட்பட்ட மேல்மாயில், ஆலங்கனேரி, கவசம்பட்டு, காவனூர், வேப்பஙகநேரி ஆகிய 5 பஞ்சாயத்துக்கு மக்களுடன் முதல்வர் முகாம், கே வி குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்தது. தாசில்தார் சந்தோஷ் தலைமை தாங்கினார் யூனியன் சேர்மன் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்து முகாமை தொடங்கி வைத்தார் சமூகபாதுகாப்பு தாசில்தார் சாந்தி வரவேற்றார். டிஆர்ஓ மாலதி முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மனு கொடுத்து வந்த மக்கள் வெயிலில் நீண்ட வரிசையில் நிற்பதை பார்த்துஅந்த பகுதியில் சார்மினார் பந்தல் அமைக்கவும், மக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து உள்ளதை பார்த்து மேலும் கூடுதல் கம்ப்யூட்டரை கொண்டு வந்து பணி மேற்கொள்ளமாறு அதிகாரியிடம் உத்தரவிட்டார். தொடர்ந்து மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். முகாமில் பட்டா மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மகளிர் முதியோர் பென்ஷன். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 1567 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. இதில் பீடியோக்கள் சதீஷ்குமார், பெருமாள் யூனியன் துணை சேர்மன் பாரதி,
மண்டல துணை தாசில்தார் பிரகாசம், , டிஎஸ்ஒ வெங்கட்குமார் யூனியன் கவுன்சிலர்கள் , தாமோதரன், விஜயலட்சுமி, சரளா. பஞ்சாயத்து தலைவர்கள் மோகன், கோகிலா, அமுதா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.