1250 லிட்டர் கள்ள சாராய ஊரல் அழிப்பு!

55பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மலைப்பகுதியில் பாறைகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1250 லிட்டர் கள்ள சாராய ஊரல்களை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி