நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை? அன்புமணி கேள்வி

59பார்த்தது
நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை?  அன்புமணி கேள்வி
நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். 90 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், நாளுக்கு நாள் முதலமைச்சரின் பேச்சு மாறும் என்றும் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தான் ஒரே தீர்வு எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுவரை 10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில், 90%க்கும் கூடுதலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என விமர்சித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி