வேடந்தாங்கள் முருகன் கோவிலில் பரணி காவடி விழா

56பார்த்தது
வேடந்தாங்கள் முருகன் கோவிலில் பரணி காவடி விழா
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் குன்றின் மீது உள்ள வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 27 அடி உயரத்தில் மலேசிய முருகன் சிலை மற்றும் சரவணப் பொய்கை குளம் அமைந்துள்ளது. பரணி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று காலை மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தேவசேனாவுக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற் றது.

தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமி சந்த னக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் வேடந்தாங்கல், பாணாவரம், காவேரிப்பாக்கம் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பரணி காவடி செலுத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகளின் ஆன்மீக கலை நிகழ்ச்சி மற்றும் நாடகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா முருகனடிமை குமார், விழா குழுவினர், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி