அரக்கோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. அரக்கோணம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிப தியுமான எம். அருந்ததி தலைமை தாங்கினார். நீதித்துறை நடுவர் எண். 1 நீதிபதி கே. ராம்குமார், அரசு வக்கீல் எம். பூபதி, வக்கீல் குட்டி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 137 வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டு அதில் பல்வேறு வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 50 லட்சத்துக்கு தீர்வு காணப் பட்டது. இதில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் வழக்குகளை முடித்து கொண்டனர்.