ஆற்காடு கல்லூரியில் இணையவழி பாதுகாப்பு விழிப்புணர்வு!

52பார்த்தது
ஆற்காடு கல்லூரியில் இணையவழி பாதுகாப்பு விழிப்புணர்வு!
ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில், இணையவழி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ராணிப்பேட்டை சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஜி. தியாகராஜன் தலைமை தாங்கி, காணொலி மூலம் இணையவழி பாதுகாப்பு, சைபர் கிரைம் என்றால் என்ன, இணைய வழியில் சைபர் கிரைம் குற்றங்கள் எவ்வாறு ஏற்படுகிறது, இதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் நர்சிங் கல் லூரி முதல்வர் சிவசக்தி, துணை முதல்வர் ஞானதீபா, ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் கோபால், மணிகண்டன், நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள், நர்சிங் மாணவிகள் கலந் துகொண்டனர்.

ஏற்பாடுகளை லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன், சாந்தி பாலாஜி, தாளாளர் கோமதி பாலாஜி, இணைச்செயலாளர் வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி