ஆற்காடு: டூ வீலர் திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது!

575பார்த்தது
ஆற்காடு: டூ வீலர் திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் உள்ள கண்ணமங்கலம் கூட்ரோட்டை அடுத்த புத்துக்கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக டூ வீலரில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் நாகராஜ் ( 28), புதுப்பாடி ஜி. எம். நகரை சேர்ந்த முருகன் மகன் கோவிந்தராஜ் (23) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் உள்பட மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.