கலவை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை!

54பார்த்தது
கலவை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை!
கலவை அருகே உள்ள கலவைப்புதூர் கிராமத்தில் சிவகாமி அம்மை உடனாகிய சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பாலமுருகன் சன்னதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ராமநவமியை முன்னிட்டு ராமர், லட்சுமணர், சீதாப்பிராட்டி, ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு பூஜையும், நாராயண பெருமாள் சன்னதி, மகாலட்சுமி தாயார் சன்னதி, ஆண்டாள் நாச்சியார் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதியில் பூஜை நடந்தது. சோமவார வழிபாடு முன்னிட்டு சிவகாமி அம்மை உடனாகிய சிதம் பரேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், போன்ற பல வித வாசனை திரவியங்களை கொண்டு கோவிலின் நிறுவனர் ஜா. அருணாச்சலம் அபிஷேகம் செய்தார். பின்னர் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சுவாமிக்கு மகா கற்பூர தீபாராதனை கட்டப்பட்டது.

பூஜையில் அப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி