ஆபத்தான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்!

74பார்த்தது
ஆபத்தான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தது.

கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு தனியாக இயங்கி வருகிறது. கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை பழைய கட்டிடத்திலேயே இயங்கிவருகிறது.

அப்பகுதி பொதுமக்கள் சாதி, இருப்பிடம், வருமான சானறு, பட்டா உள்ளிட்டவைகளை பெற தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கட்டிடத்தின் தளத்தில் அரசமர செடிகள் வளர்ந்து மாடித்தோட்டம் போல் காட்சியளிக்கிறது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து கட்டிடத்தின் உறுதித்தன்மை வலுவிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் கட்டிடத்தில் வளர்ந்துள்ள செடிகளை முழுமையாக அகற்றி, விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில் சீரமைப்பு செய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி