திருத்தணியை சேர்ந்த சீனு என்பவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்ஆர்எப் தொழிற்சாலை அருகே வரும்போது, திடீரென காரின் முன் பகுதி தீப்பற்றி எரிய தொடங்கியது.
உடனே அங்கிருந்தவர்கள் அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இது குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.