காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தில் ராஜசேகர்- மாரியம்மாள் தம்பதியினர் வசிதக்து வருகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமண மாகி விட்டது. கணவன்- மனைவி இருவரும் மண்ணால் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரைக்கு பதில் தார்பாயை போர்த்தி அதில் வசித்து வந் தனர். இதனால் மழை, வெயிலில் அவதிப் பட்டு வந்தனர்.
இதனால் அவர்கள், வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமியிடம் தங் கள் நிலைமையை கூறினார்கள். அதைத்தொ டர்ந்து உடனடியாக வீட்டின் மேற்கூரை அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் நிதி உதவி அளித்தார்.