2025-ம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www. skilltraining. tn. gov. in தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூ. 200 செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல் நிலைத் தேர்வுகள், கருத்தியல் தேர்வு 15. 10. 2024 அன்றும், செய்முறை தேர்வு 16. 10. 2024 அன்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்களை www. skilltraining. tn. gov. in தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத இப்போதே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.