நெமிலி: சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

58பார்த்தது
நெமிலி: சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலபுலம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சுடுகாடு பகுதிக்கு செல்வதற்கான சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் யாராவது இறந்தால் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக் காலத்தில் சமத்துவபுரத்தில் இருந்து மேலபுலம் பகுதியில் உள்ள பள்ளிக்கு கல்வி பயில மாணவ- மாணவிகள் சாலையில் சைக்கிளில் செல்லும்போது மழைநீர் தேங்கியுள்ள பள்ளங்களில் சிக்கி கீழே விழுகின்றனர்.

எனவே இந்த சாலையை சீரமைக்ககோரி நீண்ட நாட்களாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆகவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி