அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டு ராணியம்மாள் தெருவில் அதிக லாரிகள் செல்வதால் தார் சாலைகள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக ராம்கோ தொழிற்சாலைக்கு லாரிகள் அதிகளவு செல்வதால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று எம்எல்ஏ ரவி, வார்டு கவுன்சிலர் நரசிம்மன் ஆகியோர் ராம்கோ தொழிற்சாலை மேலாளர் சக்தியிடம் ஆலோசனை நடத்தினர்.
விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.