ஆற்காடு அடுத்த சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 60). இவர் ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலை ஜெயபால் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றுள்ளார்.
கிருஷ்ணாபுரம் கூட்டுரோடு, தாழனூர் அருகே சாலையைக் கடக்கும் போது காவனூரில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஜெயபால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகச் சாவடைந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.