உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். உணவில் அதிகளவு கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இதில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. பருப்பு வகைகளிலும் இரும்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. சோயா, பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், இரும்புச்சத்தை அதிகரிக்கலாம். பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகளும் நல்லது.