வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் வாரச்சந்தை நடைபெற்றது. ஆடிமாத கிருத்திகையையொட்டி வாரச்சந்தையில் காய்கறிகள், பூக்கள், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.
அங்குள்ள கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதனால் வழக்கத்தைவிட காய்கறிகள் அதிகமாக விற்பனையானது.
கிருத்திகையையொட்டி காய்கறிகள், தேங்காய் விலை சற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. 2 தேங்காய் ரூ. 50-க்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100-க்கும், பீன்ஸ் ரூ. 80-க்கும், தக்காளி ரூ. 60-க்கும், வெங்காயம் ரூ. 50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று மற்ற காய் கறிகளின் விலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்றதை விட கிலோவிற்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை கூடுதலாக விற்பனையானது.