வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாய் தொல்லை அதிகரிப்பு

58பார்த்தது
வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாய் தொல்லை அதிகரிப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தென்னமர தெரு, ரெட்டியப்பன் தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தெருக்கள் வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் மாணவர்கள் செல்லும்போது தெருநாய்கள் அவர்களை துரத்திச் செல்வதும், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும்போது வாகனங்களை துரத்திச் செல்லும் சம்பவமும் நடக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால், அந்த வழியாகச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டிகள் இத்தெருக்களில் கடந்து செல்வதற்கே அச்சப்பட்டு வருகின்றனர்.

ஆகையால், அப்பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்துச் செல்லும் பணியை உடனடியாக செய்து, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி