திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் (இன்று அக்டோபர். 24) வாங்கிய கடனை கட்ட முடியாததால், தொடர்ந்து கடனை செலுத்தக் கூறி கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததால் மனம் உடைந்த உதயேந்திரம் சுப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த பெண் அருணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வாணியம்பாடி தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.