திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைப்பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவர் மனைவி தனலட்சுமி (வயது 19) திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் தனலட்சுமியை அழைத்துக்கொண்டு வரும் வழியில் ஆம்புலன்ஸில் சுகப்பிரசவம் ஆகியுள்ளது. தாயும் சேயும் நலமுடன் உள்ள நிலையில் தற்போது அவர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.