போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

64பார்த்தது
வேலூர் மாவட்டம்

*குடியாத்தம் அருகே புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் திருடி சென்ற இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த போக்குவரத்து போலீசார்*


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லட்சுமணபுரம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

அப்பொழுது நம்பர் பிளேட் இல்லாத வந்த இரு சக்க வாகனத்தை தடுத்து நிறுத்தி வாகனத்தின் உரிமம், மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை பரிசோதிக்க வானத்தை ஓட்டி வந்தநபரிடம் போக்குவரத்து போலீசார் கேட்டனர்

அப்பொழுது வானத்தை ஓட்டி வந்தவர் நபர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார்
சந்தேகம் அடைந்த போக்குவரத்து போலீசார் ஈ செல்லான் மற்றும் ஸ்மார்ட் காவலன் ஆகிய செயலிகளின் மூலம் வாகனத்தை ஆய்வு செய்தனர்

அதில் அந்த இரு சக்கர வாகனம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தில் சந்தோஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் மர்ம நபர்களால் திருடு சென்றதாக புகார் அளித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கண்டறிந்தனர்

உடனடியாக அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து ஆரணி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து இரு சக்கர வாகனத்தை ஒப்படைத்தனர்

மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலைகள் குற்றங்களை தடுக்க உதவியாக உள்ளது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி