ஆம்பூரில் ஏசி சண்முகத்தை ஆதரித்து சுந்தர் சி பிரச்சாரம்!

64பார்த்தது
ஆம்பூரில் ஏசி சண்முகத்தை ஆதரித்து சுந்தர் சி பிரச்சாரம்!
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஏசி சண்முகம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவலாபுரம், மிட்டாலம், பட்ரூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து திரைப்பட இயக்குனர் சுந்தர் சி வேட்பாளர் ஏசி சண்முகம் இதுவரை செய்துள்ள சேவைகள் குறித்தும், மத்திய அரசின் நலத்திட்ட பணிகள் குறித்தும் எடுத்துரைத்து பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி