காட்பாடியில் தூய தமிழ் பயிலரங்கம்

75பார்த்தது
வேலூர்மாவட்டம், காட்பாடியில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய மன்றம் செந்தமிழ் திருத்தேர் தூய தமிழ் மாணவர் இயக்கம் மற்றும் தமிழியக்கம் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான மூன்று நாட்கள் தூய தமிழ் பயிலரங்கம் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் நடைபெற்றது இந்த பயிலரங்கில் விண்ணப்பித்திருந்த 1500 பேரில் நூறு மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிலரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது இதன் நிறைவு விழா. வி. ஐடி வேந்தர் விசுவநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன
இப்பயிலரங்கில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட முன்னாள் இயக்குநர் தங்க காமராஜ் கவிஞர் அப்துல் காதர், புலவர் பதுமனார், நேரு, திவாகர் , சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி