501சீர்வரிசைகளுடன் சென்று100 கிடா வெட்டி மகிழ்ந்த மக்கள்!

64பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த உடையராஜாபாளையம் பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கிராம மக்கள் ஒன்றிணைந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் ஆந்திர கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் அதே பகுதியில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றினைந்து ஊர் முக்கியஸ்தர்களாக உள்ள விஜி பெருமாள் மற்றும் நல்ல சின்னண்ணா ஆகியோரை கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயத்தில் இருந்து குதிரை வண்டியில் அமர்த்தி ஆட்டம் பாட்டம் மேலத்தாளங்களுடன் 501 சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக சென்று கிராமத்தின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர். மேலும் 100 க்கும் ஆடுகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர் இதணை தொடர்ந்து பலியிட்ட ஆடுகளை ஒரே இடத்தில் வைத்து பிரியாணி செய்து 1500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி