ஆம்பூர் அருகே பொதுமக்கள் அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல்!

65பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் 9 ஆவது வார்டு பகுதியில், முறையான சாலை இல்லையெனவும், கடந்த பல மாதங்களாக குடிநீர் வழங்கவில்லையெனவும், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி வாசல் எதிரே குடிநீர் பைப்லைன் உடைந்து குடிநீர் சாலையிலேயே தேங்குவதால் பள்ளிவாசலுக்கு செல்லும் இஸ்லாமியர்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகுவதாக கூறி பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தால் அவர் நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை அதனால் உங்களுக்கு ஏதும் செய்யமாட்டேன் என கூறியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி