பாலாறு படுக்கையில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

602பார்த்தது
வாணியம்பாடி அருகே பாலாற்று படுகையில் மலை போல் தேங்கியுள்ள ஊராட்சி குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சி ஒட்டியுள்ள பாலாற்று படுகையில் கடந்த சில மாதங்களாக ஊராட்சியில் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகளை ஊராட்சி வாகனங்களில் கொண்டு சென்று பாலாற்றில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இறைச்சி கடைகளில் இருந்தும் இறைச்சி கழிவுகள் கொட்டி வருகின்றனர். இதனால் பாலாறு முற்றிலும் மாசடைந்து காணப்படுகிறது. கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜாப்ராபாத் ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மருத்துவ மனைகளில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளும் நேரடியாக பாலாற்றில் கொட்டப்படுகிறது.

கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளையும், மருத்துவ கழிவுகளையும் உட்கொண்டு வருவதால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.

பாலாற்றையும், பொதுமக்களையும் , கால்நடைகளையும் பாதுகாக்க பாலாற்றில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டுபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றை தூய்மை படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று பாலாறு ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி