திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னடி குப்பம் கிராம் நிர்வாகம் அலுவலர் தினகரன் விண்ணமங்கலம் ஊராட்சி பகுதியில் அரசு அனுமதி இன்றி ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா நிலையத்தில் ஒப்படைத்தார்.வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் சிங்கார வேலன் என்ற லாரி டிரைவர் மீது ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.