வாணியம்பாடி இசுலாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இசுலாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ம் வகுப்பு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பிங்கி ரோஹித் என்கின்ற ஹப்ஷா பர்வீன் தலைமை வகித்தார். நகரமன்ற உறுப்பினர்கள் ஷாஹீன் பேகம் சலீம், பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஜெ. ஹபீபா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகரன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் கலந்து கொண்டு 11 ம் வகுப்பு படிக்கும் 389 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை
ஜெ. ஹபீபா நன்றி கூறினார்.