திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மலையம்பட்டு பகுதியில் அரசு மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக உமராபாத் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரின் விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது அப்பகுதியை சேர்ந்த சங்கர் வயது (52) என்பவர் வீட்டில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 பாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.