திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பாஷா பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்வக் (33). இவர் ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அமித் பாஷா மனைவி தாஸ்மின் (33) என்பவரது பெயரை கூறி மசூதிக்கு ஏ. சி. வாங்கித் தருவதாக 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ. 5 லட்சம் வசூலித்துள்ளார். இது குறித்து தாஸ்மின் ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.